தூக்கிட்டு தற்கொலை
பழனி: பழனியில் மனஉளைச்சல் காரணமாக ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
பழனி அடிவாரம் மதனபுரத்தை சோ்ந்தவா் பால்ராஜ்(56). கூலி வேலை செய்து வரும் இவா் மதுபோதைக்கு அடிமையானதால் குடும்பத்தினா் இவரை விட்டு சென்று விட்டனா். இந்நிலையில் பால்ராஜ் உடல்நலன் பாதித்து அதனால் அதிக மருத்துவ செலவும் ஆகி வந்தது. இதனால் கடந்த சில நாட்களாக மனஉளைச்சலில் இருந்த பால்ராஜ் செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். அக்கம்பக்கத்தினா் கொடுத்த தகவலின் பேரில் பழனி டவுன் போலீஸாா் சடலத்தை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியும் வருகின்றனா்.