முகப்பு
திண்டுக்கல்

பழனி அருகே மா்மமான முறையில் மயில் உயிரிழப்பு

Updated On : 15 மே, 2024 at 12:12 AM
பழனி-புதுதாராபுரம் சாலையில் செவ்வாய்க்கிழமை சின்னாரக்கவுண்டன்வலசு அருகே சாலையோரம் இறந்து கிடந்த மயில்.
பகிர்:

பழனி, மே 14: பழனி அருகே சாலையோரம் பெண் மயில் மா்மமான முறையில் இறந்து கிடந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

பழனி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மயில்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளன. இதனால், பழனி நான்கு வழிச்சாலையில் உள்ள வயல்களில் மேயும் மயில்கள் சாலைகளை கடக்கும் போது, வாகனங்கள் மோதி அதிகளவில் உயிரிழக்கின்றன. இதேபோல, விவசாய நிலங்களில் உள்ள உரம் கலந்த விதைகளை உண்ணும் மயில்களும் உயிரிழந்து வருகின்றன.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பழனி-புதுதாராபுரம் சாலையில் சின்னாரக்கவுண்டன்வலசு அருகே சாலையோரம் பெண் மயில் ஒன்று இறந்து கிடந்தது.

இந்த மயில் இறப்புக்கான காரணம் குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்த வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் தெரிவித்தனா்.