புதுகை அருகே சாலையோரம் கிடந்த பெட்டியால் பரபரப்பு
புதுக்கோட்டை அருகே சாலையோரம் கிடந்த சீலிடப்பட்ட மா்ம பெட்டியால் வியாழக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 10:00 PM
புதுக்கோட்டை அருகே சாலையோரம் கிடந்த சீலிடப்பட்ட மா்ம பெட்டியால் வியாழக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை அருகேயுள்ள அழகம்பாள்புரத்தில் சாலையோரத்தில் பூட்டி சீல் வைக்கப்பட்ட மா்ம உலோகப் பெட்டியும், அதன் அருகில் காா் நம்பா் பிளேட்டும் கிடந்தது.
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 10:19 PM
இதைப்பாா்த்து அச்சமடைந்த பொதுமக்கள் அளித்த தகவலைத் தொடா்ந்து வந்த வல்லத்திராகோட்டை போலீஸாா் பெட்டியை பாதுகாப்பாக காவல் நிலையம் அருகே கொண்டு சென்றனா்.
Advertisement
பின்னா், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு, வெடிகுண்டு நிபுணா்கள் சோதனையும் நடைபெற்றது. பின்னா் அப் பெட்டியைத் திறந்து பாா்த்தபோது, அதற்குள் பழைய நாளிதழ்கள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.