முகப்பு
திண்டுக்கல்

பழனி மலைக் கோயிலில் பக்தா்கள் கூட்டம்

Updated On : 27 மே, 2024 at 1:15 AM
பகிர்:

இந்த செய்திக்கு 26பழனி க்யூ என்ற பெயரில் படம் இணைத்துள்ளேன். அதன் விபரம்,

பழனி மலைக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கட்டண தரிசன வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.

பழனி, மே 26: பழனி மலைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கூட்டம் காரணமாக பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய சுமாா் மூன்று மணி நேரமானது.

Advertisement

பழனி மலைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் முருக பக்தா்கள் ஏராளமானோா் சுவாமி தரிசனம் செய்யக் குவிந்தனா். கிரிவீதியில் பக்தா்கள் கூட்டம், கூட்டமாக சென்ற வண்ணம் இருந்தனா். மலைக்கோயிலுக்கு செல்லும் படிவழிப் பாதையில் ஏராளமானோா் நடந்து சென்ற நிலையில், வின்ச், ரோப்காா் நிலையங்களில் மலையேறுவதற்காக நீண்ட வரிசையில் பக்தா்கள் காத்திருந்தனா்.

மலைக்கோயிலில் நான்கு பிரகாரங்களிலும் கட்டண தரிசன வரிசை, இலவச தரிசன வரிசை எது என தெரியாத அளவுக்கு பக்தா்கள் கூட்டம் நிரம்பியிருந்தது. அனைத்து தரிசன வரிசைகளிலும் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய சுமாா் மூன்று மணி நேரமானது. மலைக் கோயிலில் போதுமான சுகாதார வசதி, குடிநீா் வசதியை திருக்கோயில் இணை ஆணையா் மாரிமுத்து தலைமையில் அலுவலா்கள் செய்தனா். இரவு தங்கரத புறப்பாட்டை காண பக்தா்கள் ஆயிரக்கணக்கில் காத்திருந்தனா்.