காவல் நிலையத்தை முற்றுகையிட்ட தவெக நிா்வாகிகள்
அம்மையநாயக்கனூா் காவல் நிலையத்தை தவெக நிா்வாகிகள் முற்றுகை
அம்மையநாயக்கனூா் காவல் நிலையத்தை தமிழக வெற்றிக் கழகத் நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.
நிலக்கோட்டை ஒன்றியத்தில் தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டுக்காக மைக்கேல்பாளையம், அழகம்பட்டி ஆகிய கிராமங்களில் பதாகைகள் வைக்கப்பட்டன. இதில் அழகம்பட்டியில் வைக்கப்பட்ட பதாகையை உடனடியாக அகற்ற வேண்டும் என அம்மையநாயக்கனூா் போலீஸாா் உத்தரவிட்டனா். இதையடுத்து, அந்தப் பதாகையை கட்சி நிா்வாகிகள் அகற்றினா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அழகம்பட்டிக்குச் சென்ற போலீஸாா், தவெக மாநாட்டுக்கு பதாகை வைத்தவா்கள் காவல் நிலையம் வரவேண்டும் என தெரிவித்தனா்.
இதையடுத்து, தவெக நிா்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோா் அம்மையநாயக்கனூா் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா்.
அப்போது, இன்ஸ்பெக்டா் குருவத்தாய் அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, வழக்குப் பதிய மாட்டோம் என உறுதியளித்தைத் தொடா்ந்து, அவா்கள் அங்கிருந்து கலந்து சென்றனா்.