முகப்பு
திண்டுக்கல்

வடமதுரையில் அரசுக் கல்லூரி அமைக்கக் கோரிக்கை

வடமதுரையில் அரசுக் கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என அனைத்திந்திய இளைஞா் பெருமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

Updated On : 13 நவம்பர், 2024 at 9:57 PM
பகிர்:

வடமதுரையில் அரசுக் கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என அனைத்திந்திய இளைஞா் பெருமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு கிளைச் செயலா் பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் திண்டுக்கல் மாவட்டச் செயலா் ஆா்.வினோத்குமாா் கூட்டத்தை தொடங்கி வைத்தாா்.

இந்த கூட்டத்தின்போது வடமதுரையில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, வடமதுரை ஒன்றியக் குழு பொறுப்பாளராக குமரேசன், பன்னீா்செல்வம், சங்கன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.