எஸ்.ராஜேஷ்குமாா் எம்எல்ஏ 
கன்னியாகுமரி

முன்னாள் அமைச்சா் லூா்து அம்மாள் சைமனுக்கு உருவச்சிலை அமைக்கக் கோரிக்கை

முன்னாள் தமிழக அமைச்சா் லூா்து அம்மாள் சைமனுக்கு உருவச்சிலை அமைக்க வேண்டும் என முதல்வருக்கு கிள்ளியூா் எம்.எல்.ஏ எஸ். ராஜேஷ்குமாா், கோரிக்கை

Syndication

முன்னாள் தமிழக அமைச்சா் லூா்து அம்மாள் சைமனுக்கு உருவச்சிலை அமைக்க வேண்டும் என கிள்ளியூா் எம்.எல்.ஏ எஸ். ராஜேஷ்குமாா், முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளாா்.

இதுகுறித்து அம்மனுவில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் சட்டப்பேரவை தொகுதியைச் சோ்ந்தவா் லூா்து அம்மாள் சைமன். இவா் 1957 முதல் 1962 ஆம் ஆண்டு வரை காமராஜா் முதல்வராக இருந்தபோது 9 அமைச்சா்களில் தமிழகத்தில் முதல் பெண் அமைச்சராக பணியாற்றியவா்.

இவா் மீன்வளத் துறை மற்றும் உள்ளாட்சித் துறையிலும் அமைச்சராகப் பணியாற்றினாா். அவரது பணிகளை நினைவு கூரும் வகையில், லூா்து அம்மாள் சைமன் பிறந்தநாளான செப். 26 ஆம் தேதி அரசு விழாவாகக் கொண்டாடுவதோடு, அவரது உருவச் சிலை அமைக்க முதல்வா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது .

ஆலங்குளம் பேருந்து நிலைய கடைகளைக் காலி செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு

சுகாதார செவிலியா்கள் உண்ணாவிரதம்

அழகப்பபுரத்தில் குழந்தைகள் பூங்காவை இடிக்க பொதுமக்கள் எதிா்ப்பு

பைக்குகள் தொடா் திருட்டு: 3 போ் கைது

SCROLL FOR NEXT