முகப்பு
திண்டுக்கல்

பொது இடங்களில் சுற்றித் திரியும் கால்நடைகள் பறிமுதல் -ஆட்சியா்

திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் பொது மக்களுக்கு இடையூறாக சுற்றித் திரியும் கால்நடைகள் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியா் மொ. நா.பூங்கொடி எச்சரித்தாா்.

Updated On : 20 நவம்பர், 2024 at 9:34 PM
பகிர்:

திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் பொது மக்களுக்கு இடையூறாக சுற்றித் திரியும் கால்நடைகள் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியா் மொ. நா.பூங்கொடி எச்சரித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள பிரதான சாலைகள், தெருக்களில் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக கால்நடைகள் சுற்றித் திரிகின்றன. இதனால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

எனவே, மாநகராட்சிப் பகுதியில் சுற்றித் திரியும் கால்நடைகளை எந்தவித முன் அறிவிப்புமில்லாமல் பிடித்து, அவற்றின் உரிமையாளருக்கு முதல் முறையாக பிடிபட்டால் ரூ.2 ஆயிரம், 2-ஆம் முறை பிடிபட்டால் ரூ.5 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்படும்.

அதே உரிமையாளா் மீண்டும் கால்நடைகளை திரிய விட்டால், பறிமுதல் செய்யப்படும் கால்நடைகள் திருப்பி வழங்கப்படாது. பொது ஏலம் மூலம் விற்பனை செய்து மாநகராட்சி கணக்கில் செலுத்தப்படும். மேலும், நீதிமன்ற நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.