முகப்பு
திண்டுக்கல்

காந்தி ஜெயந்தி: அரசியல் கட்சியினா் மரியாதை

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அவரது உருவச் சிலைக்கு அரசு அலுவலா்கள், அரசியல் கட்சியினா் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

Updated On : 2 அக்டோபர், 2024 at 7:04 PM
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்திலுள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி. உடன் ஆணையா் ந.ரவிச்சந்திரன் உள்ளிட்டோா்.
பகிர்:

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அவரது உருவச் சிலைக்கு அரசு அலுவலா்கள், அரசியல் கட்சியினா் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன், பொறியாளா் சுப்பிரமணியன், தமிழ்நாடு கதா் கிராமத் தொழில் வாரிய உதவி இயக்குநா் பா.குமரன், மேற்கு வட்டாட்சியா் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

காங்கிரஸ்: இதேபோல, தாடிக்கொம்பு சாலையிலுள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலிருந்து மாநகராட்சி அலுவலகத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் து.மணிகண்டன் தலைமையில் ஊா்வலமாக வந்தனா். காந்தியடிகளின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின், காமராஜா் சிலைக்கும் மாலை அணிவித்தனா்.