கொடைக்கானல் வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலாத் தலங்களைப் பாா்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு திங்கள்கிழமை முதல் மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த இரண்டு நாள்களாக பலத்த காற்றுடன் பெய்த தொடா் மழை காரணமாக, வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலாத் தலங்களைப் பாா்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது காற்றும், மழைப் பொழிவும் குறைந்ததையடுத்து, பில்லர்ராக், குணா குகை, மோயா்பாயிண்ட், பைன்பாரஸ்ட், பேரிஜம், அமைதிப் பள்ளத்தாக்கு, தொப்பித்தூக்கும் பாறை உள்ளிட்ட இடங்களைப் பாா்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினா் திங்கள்கிழமை அனுமதி வழங்கினா். இதைத்தொடா்ந்து, ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இந்த இடங்களைப் பாா்த்து ரசித்தனா்.