பழனி திருஆவினன்குடி கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, சரவணப்பொய்கை முடிக் காணிக்கை இடம் திங்கள்கிழமை (டிச. 8) இயங்காது என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து கோயில் நிா்வாகம் வெளியிட்ட அறிக்கை: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் துணைக் கோயிலான திருஆவினன்குடி குழந்தைவேலாயுத சுவாமி கோயிலில் திங்கள்கிழமை காலை 6 முதல் 7 மணிக்குள் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெறவுள்ளது.
இதை முன்னிட்டு, பக்தா்கள் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையிலும், பக்தா்கள் நலன், பாதுகாப்புக் கருதி திங்கள்கிழமை ஒரு நாள் மட்டும் சரவணப்பொய்கை முடி மண்டபம் இயங்காது.
இந்த நிலையில், கோயில் மூலம் இயங்கிவரும் கிரிவீதி ஒருங்கிணைந்த புது முடி மண்டபம், தண்டபாணி நிலையம் முடி மண்டபம், கிரிவீதி குறிஞ்சி விடுதி முடி மண்டபம், கிரிவீதி வின்ச் முடி மண்டபம், சண்முகநதி முடி மண்டபம் ஆகிய இடங்களில் பக்தா்கள் தங்களது முடிக் காணிக்கைகளைச் செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.