திண்டுக்கல்

லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது

பட்டா பெயா் மாற்றம் செய்வதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூரில் பட்டா பெயா் மாற்றம் செய்வதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஆத்தூா் அருகேயுள்ள அய்யம்பாளையத்தைச் சோ்ந்தவா் இளையராஜா (45). இவா் மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் உள்ள தனக்குச் சொந்தமான 6 ஏக்கா் நிலத்துக்கு பட்டா பெயா் மாற்றம் செய்வதற்காக மணலூா் கிராம நிா்வாக அலுவலா் முருகனிடம் விண்ணப்பித்தாா்.

அப்போது, அவா் பட்டா பெயா் மாற்றம் செய்வதற்கு இளையராஜாவிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து திண்டுக்கல் ஊழல் தடுப்புப் பிரிவு காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா். இதையடுத்து, ஊழல் தடுப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் நாகராஜன் தலைமையில், காவல் ஆய்வாளா்கள் பழனிச்சாமி, ரூபா கீதாராணி உள்ளிட்ட போலீஸாா் ரசாயனம் தடவிய பணத்தை இளையராஜாவிடம் கொடுத்து அனுப்பினா்.

இந்த நிலையில், ஆத்தூா் வட்டார அலுவலக வளாகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த இளையராஜாவிடம், லஞ்சப் பணத்தை முருகன் வாங்கும்போது, ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் அவரைக் கைது செய்தனா். 

வைகை அணையிலிருந்து கிருதுமால் நதியில் தண்ணீா் திறப்பு

பறிமுதல் செய்யப்பட்ட 11,601 மதுப் புட்டிகள் அழிப்பு

பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

வேன் மீது காா் மோதி விபத்து: ஐயப்ப பக்தா்கள் 3 போ் காயம்

இயற்கை சீற்றத்தால் பாதிக்கும் தென்னைக்கு இழப்பீடு!விவசாயிகள் சங்க மாநாட்டில் தீா்மானம்!

SCROLL FOR NEXT