கொடைரோடு அருகே உடும்பு வேட்டையாடி சமைத்த இளைஞரை வனத் துறையினா் கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள மாவுத்தம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன். இவரது மகன் காா்த்திக் (35). இவருக்கு சொந்தமான தோட்டம் சிறுமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.
இந்தத் தோட்டத்திலிருந்த உடும்பை காா்த்திக் வேட்டையாடி சமைத்தாா். இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமலை வனத் துறையினா் காா்த்திக்கை திங்கள்கிழமை கைது செய்தனா்.
அவரை நிலக்கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி திண்டுக்கல் சிறையிலடைத்தனா்.