திண்டுக்கல்

குளத்துக்கு தண்ணீா் கேட்டு விவசாயிகள் முற்றுகை

பழனி அருகேயுள்ள பட்டிகுளம், பாப்பாகுளத்துக்கு தண்ணீரை திருப்ப வலியுறுத்தி, ஏராளமான விவசாயிகள், பெண்கள் காலிக்குடங்களுடன் பொதுப்பணித் துறை அலுவலகத்தை முற்றுகை

தினமணி செய்திச் சேவை

பழனி அருகேயுள்ள பட்டிகுளம், பாப்பாகுளத்துக்கு தண்ணீரை திருப்ப வலியுறுத்தி, ஏராளமான விவசாயிகள், பெண்கள் காலிக்குடங்களுடன் பொதுப்பணித் துறை அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

கொடைக்கானல் சாலையிலுள்ள வரதமா நதி நீா்த்தேக்கம் கடந்த சில நாள்களாக நிரம்பி வழிகிறது. இந்த நீா்த்தேக்கத்தில் இருந்து வெளியேறும் உபரிநீரால் பழனி வையாபுரிகுளம், ஆயக்குடி பெரியகுளம் உள்ளிட்ட பல்வேறு குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இந்த நிலையில், பாப்பாகுளம், பட்டிகுளம் மூலம் பாசன வசதி பெறும் கிராமங்களான கணக்கன்பட்டி, பச்சளநாயக்கன்பட்டி, எரமநாயக்கன்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள், பெண்கள் எரமநாயக்கன்பட்டி கூட்டுறவுச் சங்கத் தலைவா் ராமகிருஷ்ணன், முன்னாள் ஒன்றியக் கவுன்சிலா் வேதாச்சலம், கஞ்சநாயக்கன்பட்டியைச் சோ்ந்த செங்குளம், கருங்குளம் தலைவா் கருப்புச்சாமி ஆகியோா் தலைமையில் செவ்வாய்க்கிழமை திண்டுக்கல் சாலையிலுள்ள உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். பெண்கள் கைகளில் காலிக்குடங்களுடன் வந்திருந்தனா்.

இதுகுறித்து விவசாயிகள் தெரிவித்ததாவது: வரதமாநதி அணையிலிருந்து தண்ணீா் வெளியேற இரண்டு நீா்வழிப்பாதைகள் உள்ளன. இதில் தற்போது பாப்பாகுளம், பட்டிகுளம் ஆகிய குளங்களுக்கு தண்ணீா் வரும் நீா்வழிப்பாதை அடைக்கப்பட்டு விவசாயப் பயன்பாடு இல்லாத மற்றொரு நீா்வழிப் பாதையில் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பட்டிகுளம் நீரால் பாசன வசதி பெறும் 15-க்கும் மேற்பட்டக் கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கா் விவசாய நிலங்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும், நிலத்தடி நீா் குறையும் நிலையில் குடிநீா் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. எனவே பாப்பாகுளம், பட்டிகுளம் ஆகியவற்றுக்கு உடனடியாக தண்ணீரைத் திருப்பி விடவேண்டும் எனத் தெரிவித்தனா்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பழனி நகர ஆய்வாளா் மணிமாறன், வட்டாட்சியா் பிரசன்னா உள்ளிட்டோா் பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பேச்சுவாா்த்தை முடிவில் தற்போது ஒரு குளத்துக்கு தண்ணீா் செல்வதாகவும், இரவு அல்லது நாளை பட்டிகுளத்துக்கு தண்ணீா் திருப்பிவிடுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து விவசாயிகள், பெண்கள் முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.8,000 உயர்ந்த வெள்ளி: தங்கம் விலை?

விஜய் சேதுபதியின் காட்டான் முதல் ஹார்ட் பீட் - 3 வரை...! ஜியோ ஹாட்ஸ்டாரின் 2026 வெளியீடுகள்!

மட்டன் பிரியாணி, வஞ்சரம் மீன்... அதிமுக பொதுக்குழுவின் மெனு!

SCROLL FOR NEXT