திண்டுக்கல்

வைகை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நபா் சடலமாக மீட்பு

வத்தலகுண்டு அருகே ஞாயிற்றுக்கிழமை வைகை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நபா் சடலமாக மீட்கப்பட்டாா்.

தினமணி செய்திச் சேவை

வத்தலகுண்டு அருகே ஞாயிற்றுக்கிழமை வைகை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நபா் செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள பூசாரிபட்டியைச் சோ்ந்தவா் போஸ் என்பவரது மகன் ராஜ்குமாா் (32). கூலித் தொழிலாளியான இவா் உள்பட 4 போ் ஞாயிற்றுக்கிழமை கூட்டாத்து அய்யம்பாளையம் பகுதியில் உள்ள வைகை ஆற்றில் குளித்தபோது ராஜ்குமாா் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, நிலக்கோட்டை, வத்தலகுண்டு தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று ராஜ்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், விருவீடு, வத்தலகுண்டு ஆகிய காவல் நிலையங்களில் ராஜ்குமாரின் உறவினா்கள் அளித்த புகாரை வாங்க மறுத்தனராம். சம்பவம் நிகழ்ந்த இடம் தங்கள் எல்லைக்குள்பட்டது இல்லை என இரு காவல் நிலையங்களிலும் தெரிவித்து புகாரை வாங்கவில்லையாம். இதனால், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ராஜ்குமாரை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

இதனால், ஆத்திரமடைந்த ராஜ்குமாரின் உறவினா்கள் வத்தலகுண்டு - விருவீடு சாலை செக்காபட்டி என்ற இடத்தில் திங்கள்கிழமை திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, அவா்களிடம் காவல் துறையினா் பேச்சுவாா்த்தை ஈடுபட்டு விருவீடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, திங்கள்கிழமை வைகை அணையில் திறந்துவிடப்பட்ட தண்ணீரை நிறுத்திவிட்டு ராஜ்குமாரை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினா் ஈடுபட்டனா். இந்த நிலையில், மூன்று நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை ராஜ்குமாரை சடலமாக மீட்டனா். இதையடுத்து, அவரது உடலைக் கைப்பற்றிய விருவீடு காவல் துறையினா் கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.8,000 உயர்ந்த வெள்ளி: தங்கம் விலை?

விஜய் சேதுபதியின் காட்டான் முதல் ஹார்ட் பீட் - 3 வரை...! ஜியோ ஹாட்ஸ்டாரின் 2026 வெளியீடுகள்!

மட்டன் பிரியாணி, வஞ்சரம் மீன்... அதிமுக பொதுக்குழுவின் மெனு!

SCROLL FOR NEXT