கொடைக்கானல் அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
ஈரோட்டைச் சோ்ந்தவா் லோகவிக்னேஷ் (25). இவா் சனிக்கிழமை திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா்.
கொடைக்கானல்-வத்தலகுண்டு மலைச் சாலையில் நண்டாங்கரை அருகே வந்தபோது, முன்னாள் சென்ற தனியாா் பேருந்தை முந்திச் செல்ல முயன்றாா். அப்போது, நிலைதடுமாறி இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த லோகவிக்னேஷ் மீது பேருந்து மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்தது அங்கு வந்த தாண்டிக்குடி போலீஸாா் உயிரிழந்தவரின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக தாண்டிக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து தாண்டிக்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.