திண்டுக்கல்

ரயிலில் 17 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

தினமணி செய்திச் சேவை

மேற்கு வங்கத்திலிருந்து வந்த ரயிலில் கடத்தி வரப்பட்ட 17 கிலோ புகையிலைப் பொருள்களை திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

மேற்குவங்க மாநிலம், புருலியா ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலி வரை செல்லும் புருலியா அதிவிரைவு ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு புதன்கிழமை அதிகாலை வந்தது. அப்போது, திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் ரயிலின் முன்பதிவு இல்லாத பெட்டியில் சோதனை நடத்தியபோது, ஒரு பையில் 17 கிலோ புகையிலைப் பொருள்கள் இருப்பதை கண்டறிந்தனா். அந்த பைக்கு பயணிகள் யாரும் உரிமை கோரவில்லை. இதையடுத்து, 17 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், திண்டுக்கல் உணவுப் பாதுகாப்பு அலுவலா்களிடம் ஒப்படைத்தனா்.

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

மத்திய அரசின் குழந்தை காப்பகங்களில் 39,011 பேர் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

SCROLL FOR NEXT