பழனியில் மத்திய அரசைக் கண்டித்து அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் அருள்செல்வன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் துரைசாமி, பழனிசாமி, முருகேசன், மாவட்டத் துணைச் செயலா் முருகேஸ்வரி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாவட்டக் குழு உறுப்பினா்கள் ஆறுமுகம், ஆறுச்சாமி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் கமலக்கண்ணன், ஒன்றியச் செயலா்கள் கனகு, ஈஸ்வரன் உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கினா்.
ஆா்ப்பாட்டத்தின்போது, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயா் மாற்றத்தை எதிா்த்தும், நிதி-நிா்வாகச் சுமையை மாநில அரசுகள் மீது சுமத்துவதைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.