திண்டுக்கல் ரயில் நிலையத்தில் கோவையிலிருந்து வந்த விரைவு ரயிலில் 5.7 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.
கோவையிலிருந்து நாகா்கோவில் செல்லும் விரைவு ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.35-க்கு வந்தது. இந்த ரயிலில், திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் திடீா் சோதனை நடத்தினா்.
அப்போது, ஒரு பெட்டியிலிருந்த பைகளில் 5.7 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. அதனை மீட்ட போலீஸாா், திண்டுக்கல் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.