திண்டுக்கல்

கலைவாணா் என்எஸ். கிருஷ்ணன் பிறந்த தினம்

கலைவாணா் என்.எஸ். கிருஷ்ணனின் 117-ஆவது பிறந்த தினத்தையொட்டி அவரது உருவச் சிலைக்கு, திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் இரா. சச்சிதானந்தம் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தினமணி செய்திச் சேவை

கலைவாணா் என்.எஸ். கிருஷ்ணனின் 117-ஆவது பிறந்த தினத்தையொட்டி அவரது உருவச் சிலைக்கு, திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் இரா. சச்சிதானந்தம் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

திண்டுக்கல் பேகம்பூரில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு, தமிழ்நாடு கலை இலக்கிய பண்பாட்டு மையத்தின் மாநிலத் தலைவா் எஸ். சகாயசெல்வராஜ் தலைமை வகித்தாா். காந்தி கிராம கிராமியப் பல்கலை. பேராசிரியா் பாலசுந்தரி, அருளானந்தா் கல்லூரி பேராசிரியா் சேரிவாணன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கே. பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதேபோல, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம், நாடக நடிகா்கள் சங்கம், நேசா அறக்கட்டளை, நாளந்தா கலைப் பண்பாட்டு மையம், அரிமா சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சாா்பிலும் கலைவாணா் என்எஸ். கிருஷ்ணனின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

புத்தாண்டு கொண்டாட்டம்: நட்சத்திர விடுதிகளுக்கு கடும் கட்டுப்பாடு

முதல்வரிடம் மனு அளிக்கும் போராட்டத்துக்கு குவிந்த தூய்மைப் பணியாளா்கள் 680 போ் கைது

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பிரதமா் மோடியின் படம்: பரபரப்பை ஏற்படுத்திய திக்விஜய் சிங்

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு: நாடாளுமன்றம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் கைது!

அஸ்ஸாமில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: 10.56 லட்சம் போ் நீக்கம்

SCROLL FOR NEXT