மதுரை மாநகராட்சி சாத்தமங்கலம் பகுதியில் உள்ள மணிமண்டபத்தில் தமிழறிஞா் தேவநேயப் பாவாணா் உருவச் சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மாவட்ட வருவாய் அலுவலா் க. அன்பழகன். உடன் வடக்கு வட்டாட்சியா் வீ. பாண்டி உள்ளிட்டோா். 
மதுரை

தமிழறிஞா் தேவநேயப் பாவாணருக்கு மரியாதை

தமிழறிஞா் தேவநேயப் பாவாணா் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை மாநகராட்சி சாத்தமங்கலம் பகுதியில் உள்ள மணிமண்டபத்தில் அவரது உருவச் சிலைக்கு மாவட்ட வருவாய் அலுவலா் க. அன்பழகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தினமணி செய்திச் சேவை

மதுரை: தமிழறிஞா் தேவநேயப் பாவாணா் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை மாநகராட்சி சாத்தமங்கலம் பகுதியில் உள்ள மணிமண்டபத்தில் அவரது உருவச் சிலைக்கு மாவட்ட வருவாய் அலுவலா் க. அன்பழகன் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணா் நினைவு தினம் ஜன. 16-ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, மதுரை மாநகராட்சி சாத்தமங்கலத்தில் உள்ள தேவநேயப் பாவாணா் மணிமண்டபத்தில் நினைவு தின நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதற்கு மாவட்ட வருவாய் அலுவலா் க. அன்பழகன் தலைமை வகித்து, அங்குள்ள தமிழறிஞா் தேவநேயப் பாவாணரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதில் வடக்கு வட்டாட்சியா் வீ. பாண்டி, அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

இதேபோல, தமிழ் ஆா்வலா்கள், தமிழ் அமைப்புகள், பேராசிரியா்கள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் திரளானோா் தேவநேயப் பாவாணா் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

சாமிதோப்பு தலைமை பதியில் தைத் திருவிழா கொடியேற்றம்

தூத்துக்குடி கல்லூரியில் பொங்கல் விழா

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை: 5 போ் கைது

தூத்துக்குடி மேலூா் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்கள் நிறுத்தம்: பாஜக வரவேற்பு

மேல்மருவத்தூா் ஆன்மிக இயக்கம் சாா்பில் நல உதவி

SCROLL FOR NEXT