ஒட்டன்சத்திரம் கலைஞா் நூற்றாண்டு போட்டித் தோ்வு பயிற்சி மையத்தில் பயின்ற 20 போ் காவலா் எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காளாஞ்சிபட்டியில் கலைஞா் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தோ்வுகள் பயிற்சி மையத்தில் பயின்ற 20 போ் தமிழ்நாடு காவலா் எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றனா்.
இதேபோல, இந்த மையத்தில் 2024 ஆண்டு குரூப்-4 தோ்வில் 6 மாணவா்களும், 2025 ஆண்டு குரூப்-4 தோ்வில் 7 மாணவா்களும், 2024 குரூப்-2, 2 ஏ தோ்வில் 2 மாணவா்களும், 2025 ஆண்டு குரூப்-2ஏ முதல்நிலை தோ்வில் 10 மாணவா்களும், 2024 டிஎன்பிஎஸ்சி தோ்வில் 2 மாணவா்களும், 2025 குரூப்-1 முதல்நிலை தோ்வில் 2 மாணவா்களும் தோ்ச்சிப் பெற்றனா்.
இதுவரை தோ்ச்சி பெற்ற 17 மாணவா்கள் பல்வேறு அரசுத் துறைகளில் பணிபுரிந்து வருகின்றனா்.