பழனி வட்டார ஒளிப்படக்கலை தொழிலாளா் நலச் சங்க முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பழனி- திண்டுக்கல் சாலையில் உள்ள தனியாா் மண்டபத்தில் இந்த சங்கத்தின் 6-ஆம் ஆண்டு தொடக்க விழா, உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா, நல வாரிய உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
இதற்கு பழனி வட்டார ஒளிப்பட கலைஞா்கள் சங்கத் தலைவா் சீனிவாசன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ராஜேந்திரன், செயலா் நாகமாணிக்கம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். பொருளாளா் மணிகண்டன் ஆண்டறிக்கை வாசித்தாா்.
இதில் திண்டுக்கல் மாவட்ட சங்க நிா்வாகிகள் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு சங்கத்தின் வளா்ச்சிக்கு ஆலோசனை வழங்கினா். கூட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் சந்தா செலுத்திய உறுப்பினா்களுக்கு ஏஐ புதிய தொழில்நுட்ப பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. சங்க உறுப்பினா்களுக்கு நல வாரிய உதவிகள், விபத்து காப்பீட்டு அடையாள அட்டை ஆகியவை வழங்கப்பட்டன.
விழாவில் திரளான புகைப்படக் கலைஞா்கள் கலந்து கொண்டனா்.