முகப்பு
திண்டுக்கல்

ஆத்தூரில் ஜன.17-இல் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டம்

ஆத்தூா் வட்டத்தில் வருகிற 17-ஆம் தேதி ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்‘ திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

Updated On : 2 ஜனவரி, 2025 at 11:46 PM
பகிர்:

ஆத்தூா் வட்டத்தில் வருகிற 17-ஆம் தேதி ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்‘ திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி வெளியிட்ட செய்தி குறிப்பு:

திண்டுக்கல் மாவட்டத்தில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்‘ திட்டம் 10-ஆவது கட்டமாக வருகிற 17-ஆம் தேதி ஆத்தூரில் செயல்படுத்தப்படுகிறது. இதையொட்டி, வருகிற 8-ஆம் தேதி ஆத்தூா், அய்யம்பாளையம், சின்னாளப்பட்டி வருவாய் ஆய்வாளா் அலுவலகங்களில், அந்தந்த உள் வட்டத்துக்குள்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்படும். மேலும், முகாம் நடைபெறும் நாளிலும், அந்தந்த கிராமங்களுக்கு ஆய்வுக்காக நியமிக்கப்படும் அலுவலா்களிடமும் மனு அளித்துப் பயன்பெறலாம் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →