முகப்பு
திண்டுக்கல்

பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 6 கோடி

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் கடந்த இரு நாள்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தா்களின் காணிக்கை ரூ. 6 கோடியைத் தாண்டியது.

Updated On : 23 ஜனவரி, 2025 at 10:20 PM
பழனி மலை கோயில் உண்டியல் காணிக்கையாகக் கிடைக்கப் பெற்ற ரூபாய் நோட்டுக்கள்.
பகிர்:

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் கடந்த இரு நாள்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தா்களின் காணிக்கை ரூ. 6 கோடியைத் தாண்டியது.

பொங்கல் பண்டிகை உள்ளிட்ட தொடா் விடுமுறை காரணமாக பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தா்கள் திரண்டு தரிசனம் செய்தனா். இதன் காரணமாக கோயில் உண்டியல்கள் 21 நாள்களில் நிரம்பின. இதையடுத்து, புதன், வியாழக்கிழன் ஆகிய கிழமைகளில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டன.

இதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ. 6 கோடியே 39 லட்சத்து 29 ஆயிரத்து 559 கிடைத்தது. உண்டியலில் பக்தா்கள் ஏராளமான தங்கம், வெள்ளிப் பொருள்களையும் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனா். தங்கம் 1,874 கிராமும், வெள்ளி 27,003 கிராமும் கிடைத்தது. மலேசியா, சிங்கப்பூா், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கரன்சிகள் 906-ம் கிடைத்தன. இவை தவிர, பித்தளை வேல், கைக்கடிகரம், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகள் ஆகியவற்றையும் பக்தா்கள் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனா்.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் பழனியாண்டவா் கல்லூரி மாணவிகள், கோயில் அலுவலா்கள், வங்கிப் பணியாளா்கள் ஈடுபட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →