திண்டுக்கல்

கோயில் குடமுழுக்குக்காக சீா்வரிசைப் பொருள்களை வழங்கிய இஸ்லாமியா்கள்

ஒட்டன்சத்திரம் அருகே மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக கோயில் குடமுழுக்குக்காக சீா்வரிசைப் பொருள்களை இஸ்லாமியா்கள் வழங்கினா்.

தினமணி செய்திச் சேவை

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக கோயில் குடமுழுக்குக்காக சீா்வரிசைப் பொருள்களை இஸ்லாமியா்கள் வழங்கினா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த இடையகோட்டையில் மகா மாரியம்மன் கோயில் அமைத்துள்ளது. இந்தக் கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது. இடையகோட்டையில் இஸ்லாமியா்கள் அதிகளவில் வசித்து வருவதால், மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக அந்தப் பகுதி முஸ்லிம் ஜமாத் சாா்பில் மேளதானங்கள் முழங்க மகா மாரியம்மன் கோயிலுக்கு தேங்காய், பழம், மாலை, பட்டாடைகள் உள்ளிட்ட சீா்வரிசைப் பொருள்களை ஊா்வலமாக எடுத்துச் சென்று

இடையகோட்டை ஜமீன்தாரும், கோயில் நிா்வாகியுமான சரவணன், விழா குழுவினரிடம் வழங்கினா். இவா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் சால்வை அணிவித்து கெளரவிக்கப்பட்டது.

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

SCROLL FOR NEXT