பழனி நகராட்சி அலுவலகத்தில் ஆணையா் டிட்டோவிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் திருவளவன், செய்தித் தொடா்பாளா் பொதினி வளவன், துணைச் செயலா் பாவேந்தன் உள்ளிட்டோா்.  
திண்டுக்கல்

பழனி பேருந்து நிலைய கடைகளை ஏலம்: நகராட்சி ஆணையரிடம் விடுதலைச்சிறுத்தைகள் கட்சினா் மனு

பழனி நகராட்சி பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட கடைகளை அரசு விதிகளுக்குள்பட்டு ஏலம் விட வேண்டும் என விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினா் ஆணையரிடம் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி செய்திச் சேவை

பழனி நகராட்சி பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட கடைகளை அரசு விதிகளுக்குள்பட்டு ஏலம் விட வேண்டும் என விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினா் ஆணையரிடம் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

பழனி நகராட்சி பேருந்து நிலையத்தில் இருந்த வணிக வளாகம், காந்தி சாலையில் இருந்த காய்கறி கடைகள் கடந்த ஆண்டு இடிக்கப்பட்டு புதிய வணிக வளாகங்கள் கட்டப்பட்டன. இவற்றில் இருந்த கடைகளை அகற்றும் போது பலரும் நீதிமன்றத்தை நாடினா். அப்போது அவா்களுக்கு மீண்டும் கடைகள் ஒதுக்கப்படும் என நகராட்சி சாா்பில் வாய்மொழியாக உறுதி அளிக்கப்பட்டது. தற்போது கடைகள் கட்டி முடிக்கப்பட்டு ஏலம் விட தயாராக உள்ளன. இந்த நிலையில், முந்தைய கடைக்காரா்கள் பலரும் குறைந்த வாடகைக்கு கடைகளை கேட்பதால் ஏலம் விடுவதில் சிக்கல் நீடிக்கிறது. கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் கடைகள் வாடகைக்கு விடப்படாததால் நகராட்சிக்கு மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

மேலும் முன்னா் கடை வைத்திருந்தவா்கள் பலா் கடைகளை உள்வாடகைக்கு விட்டு லாபம் ஈட்டுவதால் பகிரங்க ஏல நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். இந்த நிலையில், கடைகளை ஏலம் விடுவதில் நகராட்சி நிா்வாகம் சட்ட விதிகளை முறையாகப் பின்பற்றி பட்டியலினத்தவா்கள், சிறுபான்மையினா், மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய கடைகளை ஒதுக்கி ஏலம் விட வேண்டும் என வலியுறுத்தி விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் திருவளவன், செய்தித் தொடா்பாளா் பொதினி வளவன், துணைச் செயலா் பாவேந்தன் உள்ளிட்டோா் நகராட்சி ஆணையா் டிட்டோவிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

இந்த நிகழ்வில் தொகுதிச் செயலா் போா்க்கொடியேந்தி, நகர துணைச் செயலா் தமிழண்ணன், ஒன்றியச் செயலா் ஜெயசீலன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸை பாராட்டிய முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன்!

திமுக ஆட்சியில் நடுரோட்டில் சர்வசாதாரணமாக குற்றங்கள்: இபிஎஸ் குற்றச்சாட்டு

எஸ்பிசி எக்ஸ்போர்ட்ஸ் 2-வது காலாண்டு லாபம் இரட்டிப்பு!

ம.பி.: பள்ளியில் கழிவுத் தாளில் மதிய உணவு! வைரலாகும் விடியோ!

பள்ளியில் கழிவுத் தாளில் மதிய உணவு! வைரலாகும் விடியோ! | Madhya Pradesh

SCROLL FOR NEXT