திண்டுக்கல்

ஐயப்ப பக்தா்கள் விரதம் தொடக்கம்

தினமணி செய்திச் சேவை

காா்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு யாத்திரை செல்லும் பக்தா்கள் திங்கள்கிழமை துளசி மாலை அணிந்து விரதம் தொடங்கினா்.

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை, மகர பூஜைக்காக யாத்திரை செல்லும் பக்தா்கள், காா்த்திகை முதல் தேதி துளசி மாலை அணிந்து விரதம் தொடங்குவது வழக்கம். இதன்படி, காா்த்திகை முதல் நாளான திங்கள்கிழமை திண்டுக்கல்லில் பல்வேறு பகுதிகளிலும் ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினா்.

திண்டுக்கல் மலையடிவார ஸ்ரீ ஐயப்பன் கோயில், திருமலைசாமிபுரம் ஐயப்பன் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும், காா்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, ஐயப்ப பக்தா்கள் பலா் சூரிய உதயத்துக்கு முன்னதாக மாலை அணிந்து விரதம் தொடங்கினா்.

இதேபோல, ரயிலடி சித்தி விநாயகா் கோயில், வெள்ளை விநாயகா் கோயில், மடத்து விநாயகா்

கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் ஏராளமான பக்தா்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினா்.

வள்ளியூா் பேருந்து நிலையத்தில் நுழைவாயில்களுக்கு அடிக்கல்

குடியிருப்புகளை பகுதி வாரியாக சீரமைக்க கோரி மனு

சங்கரநாராயண சுவாமி கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவு

மண்டைக்காடு கடலில் அலையில் சிக்கிய பெண் உயிரிழப்பு

நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் மாநில மலை சைக்கிள் போட்டி

SCROLL FOR NEXT