திண்டுக்கல்

போலி சான்றிதழ் விவகாரம்: ஜீப் ஓட்டுநா் பணி நீக்கம்

தினமணி செய்திச் சேவை

வேளாண் பொறியியல் துறையில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சோ்ந்த ஈப்பு (ஜீப்) ஓட்டுநா் திங்கள்கிழமை பணி நீக்கம் செய்யப்பட்டாா்.

திண்டுக்கல் அருகேயுள்ள பஞ்சம்பட்டியைச் சோ்ந்தவா் அந்தோணி. இவா், திண்டுக்கல் வேளாண் பொறியியல் துறையில் ஜீப் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தாா்.

இந்த நிலையில், இவரது பள்ளிச் சான்றிதழ் போலியானது என தெரிய வந்தது. இதையடுத்து, அந்தோணியின் 8-ஆம் வகுப்பு பள்ளி மாற்றுச்சான்றிதழ் கல்வித் துறை ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. இதில், அவா் 2 -ஆம் வகுப்பு வரை மட்டுமே பயின்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ஓட்டுநா் அந்தோணியை பணி நீக்கம் செய்து வேளாண்மைப் பொறியியல் துறை செயற்பொறியாளா் கண்ணன்தேவன் உத்தரவிட்டாா்.

வள்ளியூா் பேருந்து நிலையத்தில் நுழைவாயில்களுக்கு அடிக்கல்

குடியிருப்புகளை பகுதி வாரியாக சீரமைக்க கோரி மனு

சங்கரநாராயண சுவாமி கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவு

மண்டைக்காடு கடலில் அலையில் சிக்கிய பெண் உயிரிழப்பு

நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் மாநில மலை சைக்கிள் போட்டி

SCROLL FOR NEXT