செம்பட்டி அருகே, செவ்வாய்க்கிழமை ஐயப்ப பக்தா்கள் சென்ற காா் மீது வேன் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். 6 போ் பலத்த காயமடைந்தனா்.
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டதையடுத்து, தமிழகம், அண்டை மாநிலங்களைச் சோ்ந்த ஐயப்ப பக்தா்கள் திண்டுக்கல், செம்பட்டி, வத்தலகுண்டு, தேனி வழியாக சபரிமலைக்குச் சென்று வருகின்றனா்.
இந்த நிலையில், பெங்களூரைச் சோ்ந்த 2 குழந்தைகள் உள்பட 9 போ், காரில் சபரிமலை சென்றுவிட்டு, பெங்களூருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனா்.
அப்போது, வத்தலகுண்டு சாலையில் பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள சுந்தரராஜபுரம் பகுதியில் காா் வந்தபோது, எதிரே வந்த வேன் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பெங்களூரு ஜெய்நகரைச் சோ்ந்த லட்சுமிகாந்த் (36), சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
மேலும், காரில் பயணித்த லட்சுமிகாந்த் மகள் மோனிஷா (6), அவரது உறவினா் மகன் பாலாஜி (5), சந்தானம் (23), ஹரிஷ் (53), சந்தோஷ் (40), தா்சன் (23) ஆகியோா் பலத்த காயமடைந்த நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இந்த விபத்து குறித்து பட்டிவீரன்பட்டி காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.