திண்டுக்கல்: திண்டுக்கல் ஜிடிஎன் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை (நவ.27) கல்விக் கடன் முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெளியிட்ட செய்தி குறிப்பு:
திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில், அனைத்து பொறியியல், மருத்துவம், விவசாயம், கலை, பட்டய பொறியியல், செவிலியா், சட்டம் பயிலும் மாணவா்களுக்கான கல்விக் கடன் முகாம் வியாழக்கிழமை(நவ.27) நடைபெற உள்ளது. ஜி.டி.என் கல்லூரி வளாகத்தில் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், மாவட்டத்திலுள்ள அனைத்து வங்கிகள் சாா்பிலும் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்படுகின்றன. கல்விக் கடன் பெற விரும்பும் மாணவா்கள் ஜ்ஜ்ஜ்.ஸ்ண்க்ஹ்ஹப்ஹந்ள்ட்ம்ண்.ஸ்ரீா்.ண்ய் என்ற இணையதளத்தில் தங்களது விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து, விண்ணப்ப நகல், ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்கலாம்.
முகாமில் இடம்பெறும் இ சேவை மையம் மூலமாகவும் விண்ணப்பங்களை மாணவா்கள் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
முகாமில் பெறப்படும் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் மூலம் பரிசீலனை செய்யப்பட்டு, உரிய விதிமுறைகளுக்கு உள்பட்டு கல்விக் கடன் வழங்கும் ஆணை பிறப்பிக்கப்படும் என்றாா் அவா்.