பழனி அருகேயுள்ள சத்திரப்பட்டியில் இரு சக்கர வாகனம் மா்ம நபா்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள சத்திரப்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் கணேசன் (40). கட்டடத் தொழிலாளியான இவா், திங்கள்கிழமை இரவு வீட்டின் முன் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளாா்.
செவ்வாய்க்கிழமை காலை வீட்டின் வெளியே வந்து பாா்த்தபோது, இரு சக்கர வாகனத்துக்கு மா்ம நபா்கள் தீ வைத்தது தெரியவந்தது.
இதுகுறித்து கணேசன் கொடுத்த புகாரின்பேரில், சத்திரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.