கொடைக்கானலில் வழக்கம்போல மின் விநியோகம் இருக்கும் என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் மேத்யூ செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (அக். 29) பராமரிப்புப் பணிக்காக மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியத் துறையினா் ஏற்கெனவே அறிவித்திருந்தனா்.
இந்த நிலையில், கொடைக்கானலில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் மின் தடை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, வழக்கம்போல கொடைக்கானல் மலைப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்கும் எனத் தெரிவித்தாா்.