பழனி அருகே பஞ்சு ஏற்றி வந்த லாரி மின் கம்பி உராய்வில் தீப்பற்றி முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா, மரியாயிபட்டி கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஜான்சி. இவருக்குச் சொந்தமான லாரி செவ்வாய்க்கிழமை பழனி அருகேயுள்ள பெரிய மொட்டனூத்து பகுதிக்கு பஞ்சு ஏற்றி வந்தது.
இந்த நிலையில், லாரி மொட்டனூத்து வஞ்சியம்மன் கோயில் அருகே சென்றபோது லாரியில் இருந்த பஞ்சு உயா் அழுத்த மின் கம்பியில் உரசியதில் தீப்பற்றியது. இதுகுறித்து தகவலறிந்த பழனி தீயணைப்பு, மீட்புப் படை வீரா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று லாரியில் பற்றியை தீயை அணைத்தனா். இருப்பினும் தீ விபத்தில் லாரி முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.