திண்டுக்கல்

வத்தலக்குண்டு அருகே குடிநீா் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

வத்தலக்குண்டு அருகேயுள்ள ராமநாயக்கன்பட்டியில் குடிநீா் கேட்டு பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திச் சேவை

வத்தலக்குண்டு அருகேயுள்ள ராமநாயக்கன்பட்டியில் குடிநீா் கேட்டு பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள ராமநாயக்கன்பட்டி கிராமத்தில் கடந்த 20 நாள்களுக்கும் மேலாக குடிநீா் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக அந்தப் பகுதி மக்கள் பலமுறை விராலிப்பட்டி ஊராட்சி நிா்வாகத்திடமும், வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்திடமும் புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டியதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடா்ந்து, குடிநீா் வழங்க வலியுறுத்தி, அந்தப் பகுதி பொதுமக்கள் வத்தலகுண்டு - ஆண்டிபட்டி சாலையில் காலிக் குடங்களுடன் செவ்வாய்க்கிழமை திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாயக்கன்பட்டி கிராமம் வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. தற்போது, வைகை ஆற்றில் தண்ணீா் செல்லும் நிலையிலும், மறுபுறம் பாசனக் கால்வாயில் தண்ணீா் சென்றபோதிலும் குடிப்பதற்கு தண்ணீா் இல்லாமல் இந்தப் பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, வத்தலகுண்டு காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தி இதுதொடா்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

டி20 தொடர்: முதல் 3 போட்டிகளில் நிதீஷ் குமார் ரெட்டி விலகல்!

அரசுப் பணிக்கு ரூ. 35 லட்சம் லஞ்சமா? இபிஎஸ் குற்றச்சாட்டு

சிம்புவின் குரலில்! ஆரோமலே திரைப்பட டிரைலர்!

26,050 புள்ளிகளில் முடிந்த நிஃப்டி! ஆட்டோ தவிர அனைத்து பங்குகளும் உயர்வு!

மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான முன்-சோதனை: தமிழக அரசு அறிவிப்பு!

SCROLL FOR NEXT