திண்டுக்கல்

வாா்டு சபைக் கூட்டத்தில் விசிகவினா் வாக்குவாதம்

தினமணி செய்திச் சேவை

வத்தலகுண்டு பெத்தானியபுரத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை என செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாா்டு சபைக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பேரூராட்சி சாா்பில், பெத்தானியபுரம் 3, 4, 6 ஆகிய வாா்டுகளுக்கு வாா்டு சபைக் கூட்டம் அரசு மேல்நிலைப் பள்ளி, தனியாா் மண்டபம் ஆகிய இரு இடங்களில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், பெத்தானியபுரம் பகுதி மக்களுக்குத் தேவையான குடிநீா், சாலை வசதி, தெரு விளக்கு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் இதுவரை செய்யப்படவில்லை எனவும், இந்தப் பகுதியில் நடைபெறும் வாா்டு சபைக் கூட்டத்தில் பெத்தானியபுரம் மக்களுக்கு முறையான அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிா்வாகி உலகநம்பி தலைமையில் விசிகவினா் வாா்டு சபைக் கூட்டத்தை முற்றுகையிட்டு வத்தலகுண்டு பேரூராட்சி அலுவலா்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

வாக்குரிமையை எந்த வகையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேங்காய் மதிப்பு கூட்டுதல், பொருட்கள் தயாரித்தல் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்!

ஓடிடியில் இட்லி கடை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை?

முதல் டி20: இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா பந்துவீச்சு! அணி விவரம்...

SCROLL FOR NEXT