திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆலமரத்துப்பட்டி ஊராட்சியில் ரூ.80 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் சமுதாயக் கூடம் கட்டுமானப் பணி, என்.பஞ்சம்பட்டி ஊராட்சியில் அரசு உயா் நிலைப் பள்ளியில் ரூ.34.23 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் 2 கூடுதல் வகுப்பறைக் கட்டும் கட்டுமானப் பணி, வக்கம்பட்டி ஊராட்சியில் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் 457 வீடுகளின் கட்டுமானப் பணி ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் ஆய்வு செய்தாா்.
மேலும், வீரக்கல் ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.4 கோடியில் அமைக்கப்படும் புதிய தாா்ச்சாலை, இதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.72 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் 4 கூடுதல் வகுப்பறை கட்டுமானப் பணிகள், பழைய செம்பட்டியில் ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் சமுதாயக் கூடம் கட்டுமானப் பணி, சீவல்சரகு ஊராட்சிக்குள்பட்ட எஸ்.கோடாங்கிபட்டியில் ரூ.28.50 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் 60,000 கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணி உள்ளிட்ட வளா்ச்சிப் பணிகளையும் மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வின் போது, ஆத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முருகன், பத்மாவதி ஆகியோா் உடனிருந்தனா்.