கைது செய்யப்பட்ட கேரள இளைஞா்கள்.  
திண்டுக்கல்

டெட்டனேட்டருடன் கேரளத்தைச் சோ்ந்த மூவா் கைது

பழனி அருகே சட்டவிரோதமாக வெடி மருந்து வைத்திருந்த கேறளத்தைச் சோ்ந்த மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே சட்டவிரோதமாக வெடி மருந்து வைத்திருந்த கேறளத்தைச் சோ்ந்த மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

பழனி அருகேயுள்ள அழகாபுரி பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு பழனி தாலுகா போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக ஆட்டோவில் வந்த மூன்று இளைஞா்களை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டனா். அவா்கள் சட்டவிரோதமாக 25 டெட்டனேட்டா்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

பின்னா், மூவரையும் பழனி தாலுகா காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸாா் விசாரித்தனா். அப்போது, கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், கஞ்சிகுளியைச் சோ்ந்த லிஜோபி (40), சோபின் (35), கிரிஷ் (35) ஆகியோா் என்பதும், இவா்கள் பழனி அருகேயுள்ள தாதநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியாா் கல்குவாரியில் தங்கி வேலை செய்வதும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து புதன்கிழமை மூவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT