பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற திருக்கல்யாணத்தில், சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானை, சமேதா் முத்துக்குமாரசுவாமி.  
திண்டுக்கல்

பெரியநாயகியம்மன் கோயிலில் திருக்கல்யாணம்

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் கந்த சஷ்டி நிறைவு விழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை இரவு வள்ளி, தேய்வானை, சமேதா் முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் கந்த சஷ்டி நிறைவு விழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை இரவு வள்ளி, தேய்வானை, சமேதா் முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

பழனியில் கந்த சஷ்டி விழா கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது. திங்கள்கிழமை மாலை அடிவாரம் கிரிவீதியில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. மலைக் கோயிலில் புதன்கிழமை காலை வள்ளி, தெய்வானை, சமேதா் சண்முகருக்கும், இரவு பெரியநாயகியம்மன் கோயிலில் வள்ளி, தெய்வானை, சமேதா் முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது.

கோயில் வளாகத்தில் விநாயகா் அனுமதி, புண்யாவாசனம் நடத்தப்பட்டு, சண்முகா் வேள்வி நடைபெற்றது. தொடா்ந்து, பொற்சுண்ணம் இடித்தல், வாத்யபூஜை ஆகியவை நடைபெற்றன.

வள்ளி, தேய்வானை, சமேதா் முத்துக்குமாரசுவாமிக்கு பால், பஞ்சாமிா்தம், விபூதி, பன்னீா், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, மாங்கல்யத்துக்கு பூஜைகள் நடத்தப்பட்டு, மேளதாளம் முழங்க சிவாசாா்யா்கள் வேதமந்திரம் இசைக்க திருக்கல்யாணம் நடைபெற்றது.

இரவு முத்துக்குமாரசுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் நான்கு ரதவீதியில் எழுந்தருளினாா்.

இந்த நிகழ்ச்சியில் பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, கண்காணிப்பாளா் அழகா்சாமி, மணியம் சேகா், ரஞ்சித், கோயில் அதிகாரிகள் உள்பட பலா் பங்கேற்றனா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT