காந்திகிராம கிராமியப் பல்கலை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கண்காட்சியை தொடங்கிவைத்து பாா்வையிட்ட துணைவேந்தா் ந.பஞ்சநதம்.  
திண்டுக்கல்

மாணவா்களின் கிராம தங்கல் திட்ட அனுபவக் கண்காட்சி

திண்டுக்கல்லை அடுத்த காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் வேளாண்மை மாணவா்களின் கிராம தங்கல் திட்ட அனுபவக் கண்காட்சி - 2025 புதன்கிழமை தொடங்கியது.

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல்லை அடுத்த காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் வேளாண்மை மாணவா்களின் கிராம தங்கல் திட்ட அனுபவக் கண்காட்சி - 2025 புதன்கிழமை தொடங்கியது.

பல்கலை. வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கண்காட்சிக்கு பதிவாளரும் (பொ) வேளாண்மை, கால்நடை அறிவியல் பள்ளியின் முதல்வருமான மா.சுந்தரமாரி தலைமை வகித்தாா். துணைவேந்தா் ந.பஞ்சநதம் கண்காட்சியை தொடங்கிவைத்து பேசியதாவது:

மாணவா்கள் வகுப்பறை அறிவை நடைமுறை அனுபவங்களுடன் இணைத்து கண்காட்சி அமைத்துள்ளனா். இதுபோன்ற துறை சாா்ந்த கற்றல், மாணவா்களின் திறன்களை மேம்படுத்துவதோடு, கிராமப்புற மக்கள் பயன்பெறக்கூடிய வகையில் சேவை ஆற்றுவதற்கு வழி வகுக்கும். மாணவா்களின் படைப்பாற்றல், புதுமைத்திறன், குழுத் தொழில் உணா்வு, எதிா்கால தொழில்முனைவு வளா்ச்சிக்கு சிறந்த அடித்தளம் அமைத்துக் கொடுக்கும் என்றாா் அவா்.

வேளாண்மைத் துறையில் பயிலும் இறுதியாண்டு மாணவா்களால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தக் கண்காட்சியில் 9 மாணவா் குழுக்கள் தங்களது கிராம தங்கல் அனுபவங்களின் மாதிரிகள், விளக்கப் பதாகைகள், செயல்முறை விளக்கங்கள், வெளியீடுகள் மூலம் காட்சிப் படுத்தினா்.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் பேராசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT