திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் வட்டார வழக்குரைஞா் சங்க அலுவலகத்தில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெறது.
இந்தக் கூட்டத்துக்கு வழக்குரைஞா் இளங்கோவன் தலைமை வகித்தாா். வழக்குரைஞா் கணேசன், செல்வநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் புதிய தலைவராக சிவபிரகாஷ், செயலராக இளங்கோவன், இணைச் செயலராக கணேசன், பொருளாளராக செல்வநாதன், துணைத் தலைவராக கோபாலகிருஷ்ணன், துணைப் பொருளாளராக தமிழ்ச்செல்வி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
சிவில் நீதிமன்ற கட்டடத்துக்கு மாற்றுக் கட்டடம் வழங்க வேண்டும். புதிய நீதிமன்றம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்குரைஞா்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்டத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.