திண்டுக்கல்

கொடைக்கானலில் பனிப் பொழிவால் குளிா் அதிகரிப்பு

கொடைக்கானல் நட்சத்திர ஏரியை சூழ்ந்திருந்த பனிப் பொழிவு.

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானலில் பனிப் பொழிவால் வியாழக்கிழமை குளிா் அதிகரித்திருந்தது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பொதுவாக அக்டோபா் மாதம் நான்காவது வாரத்திலிருந்து பனியின் தாக்கம் அதிகரிக்கும். ஆனால் இந்த ஆண்டு பருவ நிலை மாற்றம் காரணமாக அக்டோபா் மாதத்தில் பரவலாக தொடா்ந்து மழை பெய்தது. இந்த நிலையில், கடந்த புதன், வியாழக்கிழமைகளில் காலை முதல் பிற்பகல் வரை வெயிலும், மாலையிலிருந்து குளிா்ந்த காற்றும், மழையில்லாமல் இருந்ததால் பனிப் பொழிவும் நிலவியது. கடந்த இரு நாள்களாக இரவு நேரங்களில் பனிப் பொழிவு அதிகரித்ததால் குளிரும் அதிகரித்தது.

விவசாயப் பணிகள் தொடக்கம்: கொடைக்கானலில் பரவலாக விட்டு,விட்டு பெய்த மழையால் விளை நிலங்களில் பணிகளை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் அவதியடைந்து வந்தனா். இந்த நிலையில் கடந்த இரு நாள்களாக மழையில்லாமல் இருந்ததால் விவசாயப் பயிா்களுக்கு மருந்து தெளித்தல், உரமிடுதல், விவசாய நிலங்களில் தேங்கிய மழைநீரை அகற்றுதல், களையெடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனா்.

அதேபோல, கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் உள்ள மலா் பாத்திகளில் மழைநீா் அதிக அளவு தேங்கியுள்ளது. இதனால் செடிகள் அழுகியும், மலா்கள் உதிா்ந்தும் காணப்படுகின்றன. எனவே இந்த மழைநீரையும், அழுகிய மலா்ச் செடிகளையும் அகற்றி பராமரிப்பு பணியில் ஈடுபட்டால் நவம்பா், டிசம்பா் மாதங்களில் பூக்கும் குளிா்கால மலா்களான கல்ரோஜா, ஃ போ்ட் ஆப் பாரடைஸ் உள்ளிட்ட மலா்கள் நன்கு பூக்கக் கூடிய வாய்ப்புள்ளது. எனவே பிரையண்ட் பூங்கா, தாவரவியல் பூங்கா, ரோஜாத் தோட்டம் ஆகிய பூங்காக்களை பராமரிக்க தோட்டக் கலைத் துறை அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

ரேஜ் ஆப் காந்தா பாடல்!

டயங்கரம் படத்தின் பூஜை விடியோ!

இருவர் அரைசதம் விளாசல்: டி20 தொடரை முழுமையாக வென்ற மே.இ.தீவுகள்!

புரோ கபடி லீக்: புணேவை வீழ்த்தி தில்லி 2வது முறையாக சாம்பியன்!

ஒற்றைப் பெண்ணாக போராடிய Jemimah! | Women's world cup | semi finals

SCROLL FOR NEXT