திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், மேற் பாா்வையாளா் அலுவலா்களுக்கு வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பான பயிற்சி நடைபெற்றது.
இதற்கு ஆத்தூா் வட்டாட்சியரும், வாக்காளா் பதிவு அலுவலருமான முத்துமுருகன் தலைமை வகித்தாா். தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்), வாக்கு சாவடி நிலை அலுவலா்கள், மேற்பாா்வையாளா்கள் கலந்து கொண்டனா். இந்தப் பயிற்சியில் வாக்காளா் திருத்தம், புதிய வாக்காளா் சோ்ப்பு, முகவரி மாற்றம் ஆகியவற்றை முறையாக, வீடு, வீடாக நேரில் சென்று பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.