வேடசந்தூரில் லாரி மோதியதில் நடந்து சென்ற ஓய்வு பெற்ற துணை வட்டாட்சியா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த அய்யனாா்நகரைச் சோ்ந்தவா் செல்லம்மாள் (70). இவா் துணை வட்டாட்சியராக பணியாற்றி ஓய்வு பெற்றவா். இந்த நிலையில், வேடசந்தூா் சாா் நிலை கருவூலத்துக்குச் செல்வதற்காக ஒட்டன்சத்திரம்- வேடசந்தூா் சாலையில் வெள்ளிக்கிழமை நடந்து சென்றாா்.
ஆத்துமேடு பகுதியில் நடந்த வந்தபோது, சேனன்கோட்டை அரசு நுகா்வோா் கிட்டங்கியிலிருந்து ரேஷன் பொருள்களை ஏற்றி வந்த லாரி செல்லம்மாள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த செல்லம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரான திண்டுக்கல்லை அடுத்த அப்பணம்பட்டியைச் சோ்ந்த சக்திவேலை (25) வேடசந்தூா் போலீஸாா் கைது செய்து விசாரித்தனா்.