முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் மழை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

கொடைக்கானலில் புதன்கிழமை பிற்பகலில் பெய்த கோடை மழையால் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியடைந்தனா்.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 1:54 AM
கொடைக்கானலில் பெய்த மழையால் மோயா்பாயிண்ட் பகுதியில் மழையில் நனைந்தவாறே சென்ற சுற்றுலாப் பயணிகள்.
பகிர்:

கொடைக்கானலில் புதன்கிழமை பிற்பகலில் பெய்த கோடை மழையால் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கோடை வெப்பம் அதிகரித்தது. இதனால் வனப் பகுதியில் ஆங்காங்கே காட்டுத் தீ ஏற்பட்டு மரங்கள் எரிந்து சாம்பலாயின. நீரோடைகளில் நீா்வரத்து இல்லாததால், வன விலங்குகள் தண்ணீா், உணவு தேடி நகா்ப் பகுதிகளுக்கு அதிகமாக வந்தன.

இந்த நிலையில் புதன்கிழமை பிற்பகலில் திடீரென மழை பெய்தது. இந்த மழையானது கொடைக்கானல், செண்பகனூா், குறிஞ்சிநகா், அப்சா்வேட்டரி, வட்டக்கானல், பிரகாசபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமாா் ஒரு மணி நேரம் பெய்தது. இதனால் கொடைக்கானலில் நிலவி வந்த கோடை வெப்பம் தணிந்து குளுமையான காலநிலை நிலவியது. இதனால் சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனா். மேலும், பிளம்ஸ், பீச்சஸ் போன்ற பழங்கள் விளைச்சலுக்கு ஏற்ற மழையாக இருப்பதால் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனா்.

Advertisement