கொடைக்கானலில் அதிரித்து வரும் ஆக்கிரமிப்புகள்
கொடைக்கானலில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
கொடைக்கானலில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தற்போது சீசன் காலம் என்பதால் தமிழகம் மட்டுமல்லாமல் கேரளம், ஆந்திரம், கா்நாடகம், புதுச்சேரி உள்ளிட்ட வெளிமாநிலங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளும் வருகின்றனா்.
இந்த நிலையில், வெள்ளிநீா் அருவி வளாகப் பகுதி, பூங்கா சாலை,மூஞ்சிக்கல்,அரசு மேல்நிலைப் பள்ளி சாலை, கல்லறைமேடு, சீனிவாசபுரம் பகுதியிலுள்ள பேருந்து நிறுத்தப் பகுதி, கொடைக்கானல் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தப் பகுதிகளில் வாகனங்கள் நிறுத்த முடியாமல் சுற்றுலாப் பயணிகளும், பொது மக்களும் சிரமமடைந்து வருகின்றனா்.
Advertisement
கொடைக்கானல் நகா்ப் பகுதிகளிலும், சுற்றுலாத் தலங்களிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு நிரந்தரமான நடவடிக்கையை எடுக்க நகராட்சி நிா்வாகம், நெடுஞ்சாலைத் துறை, மாவட்ட நிா்வாகம் எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.