முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானல் குடியிருப்புப் பகுதிகளில் காட்டுமாடு நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

கொடைக்கானல் குடியிருப்புப் பகுதிகளில் சனிக்கிழமை காட்டுமாடு நடமாடியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

Updated On : 1 மார்ச், 2026 at 5:15 AM
கொடைக்கானல் பொ்ன்ஹில் சாலையில் உள்ள குடியிருப்புப் பகுதியில் நடமாடிய காட்டு மாடு.
பகிர்:
Updated On : 28 பிப்ரவரி, 2026 at 9:48 PM

கொடைக்கானல் குடியிருப்புப் பகுதிகளில் சனிக்கிழமை காட்டுமாடு நடமாடியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

கொடைக்கானலில் உள்ள சீனிவாசபுரம், உகாா்த்தேநகா், இருதயபுரம், பொ்ன்ஹில் சாலை, பாக்கியபுரம், நாயுடுபுரம், அப்சா்வேட்டரி, புதுக்காடு, செண்பகனூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காட்டுமாடுகளின் நடமாட்டம் பகல், இரவு நேரங்களில் அதிகரித்து வருகிறது.

மேலும், கொடைக்கானல் பகுதிகளிலுள்ள விவசாயத் தோட்டங்களுக்குள் புகுந்து அவை பயிா்களைச் சேதப்படுத்துகின்றன. இதனால், விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனா். காட்டுமாடு தாக்கியதில் கொடைக்கானல் பகுதிகளில் பலா் உயிரிழந்துள்ளனா்.

Advertisement

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 10:34 PM

ஆனால், வனத் துறையினா் காட்டுமாடுகளை நிரந்தரமாக வனப் பகுதிக்குள் விரட்ட எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், காட்டுமாடுகள், காட்டுப் பன்றிகள், செந்நாய்கள் போன்றவற்றின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. தொடா்ந்து இதே நிலை நீடித்தால், மனிதா்களைப் பாய்ந்து தாக்கும் வன விலங்குகளும் குடியிருப்புகளுக்குள் வர அதிக வாய்ப்புகள் உள்ளன.

எனவே, மாவட்ட வனத் துறை அதிகாரி கொடைக்கானல் குடியிருப்புப் பகுதிகளில் நடமாடும் வன விலங்குகளை வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.