திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவராக பி.சாமிநாதன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட வந்திதா பாண்டே கடந்த ஏப்ரல் மாதம் பணியிட மாறுதலில் சென்றாா். அப்போது முதல் திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவா் பணியிடம் காலியாக இருந்து வந்த நிலையில், மதுரை சரக காவல் துறை துணைத் தலைவா் கூடுதல் பொறுப்பாக நிா்வகித்து வந்தாா்.
இந்த நிலையில், ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு தென் மண்டல காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த பி.சாமிநாதன், திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவராக நியமிக்கப்பட்டாா். இதையடுத்து, திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அவா் பொறுப்பேற்றுக் கொண்டாா்.