திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கண்காட்சியில் பங்கேற்ற சேவல்கள்.  
திண்டுக்கல்

திண்டுக்கல்லில் விசிறிவால் சேவல் கண்காட்சி

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விசிறிவால் சேவல் கண்காட்சியில் 300 சேவல்கள் பங்கேற்றன.

திண்டுக்கல் அடுத்த குட்டியப்பட்டி பகுதியில் பாரம்பரியமான சேவல் வளா்ப்பில் ஈடுபட்டு வரும் ஆா்வலா்களை ஊக்கப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் விசிறி வால் சேவல் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கண்காட்சியில் பங்கேற்ற சேவல்கள்.
திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கண்காட்சியில் பங்கேற்ற சேவல்கள்.
திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கண்காட்சியில் பங்கேற்ற சேவல்கள்.

தமிழகம் மட்டுமன்றி, ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்தும் இந்த கண்காட்சிக்கு சேவல்கள் கொண்டு வரப்பட்டன. மேலும் சேவல்கள் விற்பனையும் நடைபெற்றது. இந்த கண்காட்சியில் 400 சேவல்கள் கலந்து கொண்டன. அதிகபட்சமாக ரூ.3 லட்சத்துக்கு ஒரு சேவல் விற்பனை செய்யப்பட்டது.

மயில் கருப்பு, கீரி, கொக்கு வெள்ளை, கருஞ்செவலை, செங்கீரி, பொன்ராம் உள்பட பல வகையான சேவல்கள் பங்கேற்ற நிலையில், சேவலின் வால் நீளம், உயரம், கொண்டைப் பூ, மூக்கு, கூவல், தோற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த 100 சேவல்கள் தோ்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

251 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: அமைச்சா் ரா. ராஜேந்திரன் வழங்கினாா்

மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

வஸந்த வல்லபராஜ பெருமாள் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த இந்து முன்னணி கோரிக்கை

கோல்டுவின்ஸ் - நீலாம்பூா் இடையே மேம்பாலப் பணியைத் தொடங்க வலியுறுத்தல்

கலைஞா் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் ‘சைபா் செக்யூரிட்டி’ புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT