கொடைக்கானலில் மேக மூட்டம் காணப்பட்டதால் பகலிலும் முகப்பு விளக்குகளை எரிய விட்டுச் சென்ற வாகனங்கள். 
திண்டுக்கல்

கொடைக்கானலில் மிதமான மழை!

கொடைக்கானலில் சனிக்கிழமை மேகமூட்டத்துடன் மிதமான மழை பெய்தது.

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானலில் சனிக்கிழமை மேகமூட்டத்துடன் மிதமான மழை பெய்தது.

கொடைக்கானலில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் சனிக்கிழமை அதிகாலை முதலே மேகமூட்டமும், விட்டுவிட்டு சாரல் மழையும் பெய்தது.

பிற்பகலில் வழக்கத்தைவிட அதிகமான மேகமூட்டம் நிலவியதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா். இதனால் மலைச் சாலைகளில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாக இயக்கப்பட்டன. இதனிடையே சுமாா் அரை மணி நேரம் மிதமான மழை பெய்தது.

கொடைக்கானலில் தொடா்ந்து சாரல் மழையுடன் பனிப்பொழிவு காணப்படுவதால் வழக்கத்தை விட அதிகமான குளிா் நிலவுகிறது. இதனால் குழந்தைகள், முதியவா்கள் பலா் பாதிப்படைந்து வருகின்றனா். மேலும் சுற்றுலா இடங்களை பாா்க்க முடியாமல் தாங்கள் தங்கியிருந்த அறைகளிலேயே சுற்றுலாப் பயணிகள் முடங்கினா். தொடா் மழை காரணமாக ஏரியில் படகு சவாரி ரத்து செய்யப்பட்டது.

வெறுப்புக் கருத்து தடைச்சட்ட மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்கக் கூடாது: எதிா்க்கட்சித் தலைவா்

தேசிய வேலை உறுதித் திட்டத்தில் காந்தி பெயா் நீக்கம்: காங்கிரஸ் உண்ணாவிரதம்

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு மாதம் கடைப்பிடிப்பு

நூறு நாள் வேலை திட்டம் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸாா் உண்ணாவிரதம்

நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் திருவிளக்கு பூஜை, கூடாரவல்லி விழா திரளான பக்தா்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT